வாறுகாலுக்குள் மின்கம்பம்

Update: 2023-03-05 07:55 GMT

நெல்லை மேலப்பாளையம் 52-வது வார்டு கரீம் நகர் பகுதியில் வாறுகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தெருவின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், வாறுகாலுக்குள்ளே மின்கம்பம் இருக்குமாறு அமைத்துள்ளனர். இதனால் வாறுகாலில் கழிவுநீர், மழைநீர் செல்வதில் இடையூறு ஏற்படும். எனவே மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்