உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-02-22 11:44 GMT

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை பகுதியில் சாலையின் ஓரத்தில் மின் கம்பம் நடப்பட்டு அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் மின் கம்பியில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பத்தில் இருந்த சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் மின்கம்பம் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்