எரியாத மின் விளக்குகள்

Update: 2023-02-19 12:09 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்தை சார்ந்தது முனியங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் தென்புற பகுதியில் செங்குலம் ஏரி மற்றும் பெரிய திருக்கோணம் பஞ்சாயத்தை சார்ந்த சர்க்கனேரி ஏரிக்கரை வழியாக பெரிய திருக்கோணத்தில் செயல் படும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து கீழப்பழுவூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கு தினமும் எண்ணற்ற லாரிகள் மூலம் மின்னல் வேகத்தில் சுண்ணாம்பு கற்களை வெளிப்பிரிங்கியம் , நாயக்கர் பாளையம் கிராமங்கள் வழியாக எடுத்து செல்கின்றனர். இதனால் வெளிப்பிரிங்கியம், பெரிய திருக்கோணம் கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் மோசமான சூழல் இருந்து வந்தது. மேற்சொன்ன பகுதிகள் மிகவும் ஆபத்தான வளைவுடன் கூடிய இருள் சூழ்ந்த பகுதியாகும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளி பிரிங்கியம் கிராமத்திற்கு செல்லும் நுழைவாயிலுக்கு நேர் கிழக்கே மற்றும் முனியங்குறிச்சி கருமாதி தோப்பு அருகில் 2 இடங்களில் தனியார் சிமெண்டு ஆலை சார்பில் சோலார் மின்விளக்குகள் அமைத்து தரப்பட்டது. இந்த சோலார் விளக்குகள் சில நாட்கள் மட்டுமே எரிந்து வந்தது. அதன் பிறகு இதுநாள் வரை சோலார் விளக்கு எரியாமல் பழுதடைந்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் இயற்கை உபாதைக்கு செல்லும் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சபடுகின்றனர். மேலும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு இவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் இருள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் கடிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்