நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை குழாய்கள் பதிக்கும் பணி நிறைவடைந்தும் சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. ஆனாலும், போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைத்தனர்.