தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கியநகர் அருகே சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அதைதொடர்ந்து சாலையோரத்தில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டன. ஆனால் அங்கிருந்த மின்மாற்றி அகற்றப்படாமல் உள்ளது. மேலும், சாலை விரிவாக்க பணிகள் காரணமாக சாலை உயர்ந்ததன் காரணமாக மின்மாற்றி தாழ்வாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்மாற்றியை இடம் மாற்றிட நடவடிக்கை எடுப்பார்களா?