கரூர் மாவட்டம், காந்திகிராமம் வடக்கு முத்துநகர் 3-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பம் மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.