பண்ருட்டி தாலுகா கணிசப்பாக்கம் கிராமத்தில் உள்ள 5 தெருமின்விளக்குகள் கடந்து ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.