சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபொன்பரப்பி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் உள்ள தெரு மின் விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே எரியாத தெருமின்விளக்குளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.