மேலக்மணக்குடி-கீழமணக்குடியை இணைக்கும் வகையில் பழையாற்றின் மீது மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் வாகன ஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் அமைப்பட்டது. தற்போது இந்த மின்விளக்குகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், கன்னியாகுமரி.