புவனகிரி தாலுகா வடதலைக்குளம் காசிநகர் தெருவில் கடந்த இரண்டு மாத காலமாக மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி பொதுமக்கள் வீட்டுகுள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.