பெங்களூரு ஹெண்ணூர்-கொத்தனூர் மெயின் ரோட்டில் சாலை தடுப்பு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் தற்போது ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை அங்கிருந்து அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.