பெங்களூரு வசந்த்நகர் கன்னிங்காம் ரோடு ஜங்ஷன் 7-வது கிராஸ் ரோட்டில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் இருந்து மின்வயர்கள் அறுந்து தொங்குகிறது. இதுகுறித்து பெஸ்காம் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்கம்பத்தையொட்டி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு மின்கம்பத்தில் அறுந்து தொங்கும் வயர்களை அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.