கடலூர் மாவட்டம் திருப்பாலை ஒன்றியம் டி நெடுஞ்சேரி முருகன் கோவில் தெருவில் கடந்த ஒரு மாத காலமாக தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரவில் அப்பகுதி மக்கள் வீட்டுகுள்ளேயே முடிங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.