உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2022-07-18 17:49 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை உழவர் சந்தை எதிரே உள்ள கலப்பு காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்