கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை தொழிலாளர் சலவையகம் அருகே மின் கம்பம் 15 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டு அங்குள்ள கடைகளுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் வழியாக 24 மணி நேரமும் மின் வினியோகம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.