தெரு விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-07-18 17:45 GMT

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரம் தெற்கு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி கரூர் மணப்பாறை சாலையிலிருந்து கொரலப்பன்பட்டிக்கு தார்சாலை பிரிந்து செல்கிறது. அந்த பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாமையால் அப்பகுதி மக்களும், கொரலப்பன்பட்டிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்