கீழே விழுந்த உயர் கோபுர மின் விளக்கு

Update: 2022-07-18 17:30 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை துறையினரால் உயர் கோபுரமின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிவேக காற்று வீசியதில் மின் கோபுர மின் விளக்கு தவறி கீழே விழுந்தது. இதில் கீழே யாரும் இல்லாததால் ஏதும் சேதமடையவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் பஸ் நிறுத்ததில் திருட்டு நடந்து விடுமோ? என்ற அச்சத்துடன் நின்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்