சாலையில் தொங்கும் மின்வயர்கள்

Update: 2023-01-01 15:01 GMT
  • whatsapp icon
பெங்களூரு நந்தினி லே-அவுட் பஸ் நிலையம் அருகே ஒரு வளைவு பகுதி உள்ளது. அந்த பகுதியில் செல்லும் மின்வயர்கள் அறுந்து சாலையில் தொங்குகிறது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிறைய பேர் செல்கின்றனர். அறுந்து தொங்கும் மின்வயர்களால் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அறுந்து தொங்கும் மின்வயர்களை அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்