கடலூர் மாவட்டம் தொண்டமாநத்தம் ஊராட்சி சுப்ரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள தெருமின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.