காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவனூர் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டும் இடத்தின் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. பலத்த காற்று அடிக்கும் போது டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் கம்பிகள் கட்டிடத்தில் உரசி உயிர் சேதம் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இதனால் கட்டிடப் பணி முழுமை அடையாமலேயே இருந்து வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா ?