புதரை அகற்ற வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னைநகர் வீட்டு வசதி காலனியில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளின் எதிரே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், அங்கு விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாற வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.ஜோசப் செல்வன், புன்னைநகர். 80984 86069