விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி ஊராட்சி அழகாபுரி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.