உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-12-25 14:29 GMT

கூத்தாநல்லூர் பாய்க்கார பாலம் வழியாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதன்காரணமாக பாய்க்கார பாலத்தில் போக்குவரத்து அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் பாலப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். வெளிச்சம்மில்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்