நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டி சகாயமாதா கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து வருகிறது. கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.