கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் இருந்து சர்ச் ரோடு வரை செல்லும் வழியில் உயர்கோபுர மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு மின்கம்பம் விரிசல் விடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழ வாய்ப்பு உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். அதனால் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.