ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-12-18 12:25 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி திருவாசல் பகுதியில் வயல்வெளி பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது எந்நேரத்திலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதால் வயலில் இறங்கி வேலை பார்க்க பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்