கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி மூடி இல்லாமல் திறந்தே கிடக்கிறது. அப்பகுதியில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவை உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மின்விபத்தை தவிர்க்கும் வகையில், மின்பெட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.