பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அவ்வை நகர் அருகில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தை சுற்றி அடர்ந்த காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கிருந்து விழும் மரம்கள் மற்றும் குப்பைகள் குடியிருப்பு பகுதியில் விழுந்து குடிநீர் குழாய் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைகின்றன. மேலும் இப்பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.