கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான மின்கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் புதுக்குப்பத்திற்கும், நேரு நகரத்திற்கும் இடையே உள்ள பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.