மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2022-07-17 18:24 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதியில் உள்ள மின்மாற்றி காட்டு பகுதியில் உள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து வரகூர் பூங்கா நகர் பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த மின்மாற்றிக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாததால் மின் வெட்டு ஏற்படும்போது அதனை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றன. மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் எதிர்பாராத மின் நிறுத்தத்தின்போது பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்