ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-04 16:50 GMT

தென்காசி அருகே குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுக்காட்டுவலசை பால்பண்ணை தெருவில் வாறுகாலுக்குள் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்