திண்டுக்கல் ரவுண்டு ரோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருந்து அனுமந்தநகர் மேம்பாலம் செல்லும் வழியில் உள்ள 4 மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.