அந்தியூரை அடுத்த கைகாட்டி பிரிவு பகுதியில் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தை சுற்றிலும் முள் செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும் அதில் உள்ள மின் கம்பியில் செடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இதனால் அந்த தெருவிளக்கில் இருந்து வெளிச்சம் அந்த அளவுக்கு ெதரிவதில்லை. மேலும் செடியால் மின் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பம் மற்றும் கம்பியில் படர்ந்து உள்ள செடிகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.