மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி சின்னநாகங்குடி கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய பணிகளுக்காக கொண்டுவரப்படும் கனரக வாகனங்களை வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மரக்கிளைகளில் மின்கம்பிகள் சிக்கிக்கொள்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?