மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டுக்கள் அதிக அளவில் நடைபெறும் வண்ணமாக உள்ளன. எனவே, இதனை தடுக்கும் வகையில் மேலூர் மெயின் ரோடு திருமோகூர் சந்திப்பில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.