ஆபத்தான நிலையில் மின்மாற்றி

Update: 2022-11-27 10:22 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு டவுன் பட்டுக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ள போலீஸ் நிலையம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாக்கிபிடித்துள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல அதன் அருகே உள்ள மற்றொரு மின்கம்பமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை சீரமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்