தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-07-17 14:06 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் பகுதியில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின்கம்பிகள் சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகளில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகனை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்