மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்

Update: 2022-11-23 12:53 GMT

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்னி தெருவின் தென்பகுதியில் உள்ள மின்கம்பத்தை சூழ்ந்து தென்னை, மாமரம் போன்றவை உள்ளன. இதனால் உயரழுத்த மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்