மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-23 12:41 GMT

நாகை சங்கமங்கலம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம்உள்ளது. இதன் முன்னால் உள்ள ஒரு மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளன. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மேற்கண்ட பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்