சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-20 12:26 GMT
வீரவநல்லூர் 13-வது வார்டு இலவடி வடக்கு தெருவில் கன்னடியன் கால்வாய் படித்துறை அருகில் உள்ள சிமெண்டு மின்கம்பத்தில் 3 இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்