தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இரும்பு, தகரத்தால் ஆன பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகத்தின் மேற்கூரையை உரசியபடி தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் பலத்த காற்று வீசும் போதும், இடி, மின்னல்கள் வரும்போதும் நிழலகத்தில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?