சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-07-16 17:17 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கிராமம் தட்டுமால் படுகை பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த மின்கம்பிகள் அருகில் உள்ள மரக்கிளையிலும் உரசிய நிலையில் உள்ளது. இதனால் மழை நேரத்தில் மரங்களில் மின்சாரம் பாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கதிரவன், திருவளஞ்சுழி

மேலும் செய்திகள்