நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி சந்தானதெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன்காரணமாக அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின்கம்பிகள் மரக்கிளைகளில் சிக்கிக்கொள்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?