திருக்கோவிலூர் அடுத்த எடையூர் தகடி மெயின்ரோட்டில் உள்ள ரைஸ் மில் பின்புறம் 2 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மின்கம்பவத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.