காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமம் அம்மன் கோவில் தெருவில் மின் கம்பம் உடைவது போல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதன் அருகே நடக்கும் பொழுது எப்போது விழும் என்று தெரியாமல் அச்சத்துடன் நடக்கின்றனர். மின்கம்பம் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மின்வாரியம் துரித நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.