கோபி மொடச்சூர் சந்தை அருகே மில்ரோட்டையும் தேர் வீதியையும் இணக்கும் சந்தில் மின்கம்பம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து பேராபத்து ஏற்படலாம். ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.