நாகை மீன்மார்க்கெட் பகுதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?