பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாய்ந்தது. சாய்ந்த நிலையில் நிற்கும் இந்த மின்கம்பத்தால், பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.