திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சி கோடாங்கிபட்டி ஏ.டி.காலனியில் போதிய அளவு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி விடுகின்றன. பெண்கள் வெளியே நடமாடவே பயமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும்.