திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வண்ணாடுகிராமத்தில் தோணூர்-கிணத்தூர் செல்லும் சாலை ஓரமாக மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல்பகுதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.